IDBI வங்கியில் மாபெரும் வேலைவாய்ப்பு ! –

IDBI வங்கியில் மாபெரும் வேலைவாய்ப்பு ! – 59 ஆயிர ஊதியத்தில் 134 காலிப்பணியிடங்கள்
IDBI வங்கி ஆனது அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Specialist Cadre Officers (DGM (Grade D), AGM (Grade C), Manager ( Grade B), Assistant Manager (Grade A)) பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. பதிவு செய்திட தேவையான தகவல்கள் மற்றும் தகுதிகளை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம். மேலும் அவற்றின் உதவியுடன் இந்த வங்கி பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

நிறுவனம் IDBI Bank
பணியின் பெயர் Specialist Cadre Officers (DGM (Grade D), AGM (Grade C), Manager ( Grade B), Assistant Manager (Grade A))
பணியிடங்கள் 134
கடைசி தேதி 07.01.2021
விண்ணப்பிக்கும் முறை Online
வங்கி பணியிடங்கள் :
மொத்தம் 134 காலியிடங்கள் உள்ளதாக அவ்வங்கி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

DGM (Grade D) – 11 பணியிடங்கள்
AGM (Grade C) – 52 பணியிடங்கள்
Manager ( Grade B) – 62 பணியிடங்கள்
Assistant Manager (Grade A) – 09 பணியிடங்கள்
IDBI வயது வரம்பு :
01.11.2020ம் தேதி கணக்கீட்டின் படி, குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 45 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

IDBI வங்கி கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு சம்பத்தப்பட்ட ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.Sc. / BA (Maths or Stat.)/ BE/ B Tech/ MBA/ Degree in Law/ Graduate/ Post Graduate/ Master/
Bachelor degree/ MCA இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
மேலும் அந்தந்த பணிகளின் பிரிவுகளில் குறைந்தபட்சம் 4 வருடங்கள் முதல் அதிகபட்சம் 10 வருடங்கள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

SCO ஊதிய விவரம் :

 
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.23,700/- முதல் அதிகபட்சம் ரூ.59,170/- வரை ஊதியம் வழங்கப்படும்.

IDBI தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Group Discussion (GD) / Personal Interview (PI) மூலமாகவும் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கொண்ட தகவல்களுக்கு அதிகார்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

SCO விண்ணப்பக் கட்டணம் :
பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.700/-
SC/ST/PWD விண்ணப்பதாரர்கள் – ரூ.150/-

IDBI SCO விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 07.01.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Comments