ரூ.23000 ஊதியத்தில் பொறியாளர்களுக்கு ECIL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021..!

ரூ.23000 ஊதியத்தில் பொறியாளர்களுக்கு ECIL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021..!

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் எனப்படும் ECIL நிறுவனத்தில் காலியாக உள்ள Technical Officer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

இந்த அரசு பணியிடங்களுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நிறுவனம் :ECIL
பணியின் பெயர்:Technical Officer
பணியிடங்கள்:01
கடைசி தேதி:16.02.2021
விண்ணப்பிக்கும் முறை:ஆன்லைன்
ECIL பணியிடங்கள் 2021 :

ECIL நிறுவனத்தில் Technical Officer பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Technical Officer வயது வரம்பு :

அதிகபட்சம் 30 வயதிற்கு உட்பட்டவராக இருந்தால் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க இயலும்.

ECIL கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் Electronics and Communication பாடப்பிரிவுகளில் First-class Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் மேற்கூறப்பட்ட பணிகளில் ஒரு வருடமாவது பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ஊதிய விவரம் :

பதிவு செய்வோரில் தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்சம் ரூ.23,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

ECIL தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written Test and Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். நேர்காணலானது வரும் 16.02.2021 அன்று நடைபெற உள்ளது.


விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 16.02.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Application Form

Official Website




Comments